திமுக அரசின் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, இவைகளை கண்டித்து புவனகிரியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் புவனகிரி எம்ஜிஆர் சிலை அருகே ஆளும் திமுக அரசின் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு இப்படியான விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும், சட்டம் ஒழுங்கின் சீர்கேடு பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டம் புவனகிரி நகரச் செயலாளர் செல்வகுமார் தலைமையேற்க புவனகிரி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் விநாயகமூர்த்தி, கீரப்பாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ் பி கருப்பன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முருகமணி, கடலூர் மேற்குமாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன், கடலூர் மேற்குமாவட்ட இளைஞரணிச் செயலாளர் வீரமூர்த்தி ஆகியோர் கலந்து கொள்ள கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் புவனகிரி எம்எல்ஏவுமாகிய அருண்மொழிதேவன் கண்டன உரையாற்றினார்.
புவனகிரி எம்எல்ஏஅருண்மொழிதேவன் பேசும்போதுதமிழக முதல்வர் என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறினார். ஆனால் இப்போது தன் மகன் உதயநிதியை எம் எல் ஏ வாக்கி, அமைச்சராக்கி இருக்கிறார். அதுபோல தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னது எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்கள். இனி எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அதில் அதிமுக தான் வெற்றி பெறும் என்று தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நகர நிர்வாகிகளும் ஏராளமான அதிமுக தொண்டர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றும் போது தாங்களும் கோரஸாக கூறினார்கள்.


No comments:
Post a Comment