கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் கார்மங்குடி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்கு ஏற்கனவே 2001 2002 ஆம் ஆண்டு வழங்கிய மன பட்டாவில் மீதமுள்ள 35 மன பட்டாக்களை கடந்த 20 வருடங்களாக பயனாளிகள் மனப்பட்டா கேட்டும் அதிகாரிகள் வழங்காததை கண்டித்து இன்று 16 12 2022 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கவிஞர் செல்ல ஆனந்தமாலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் சிதம்பரம் சார் ஆட்சியாளர்களை சந்தித்து ஆதிதிராவிட மக்களுக்கு மனைபட்டா வழங்க கோரி மனு கொடுக்கப்பட்டது இதில் மனித உரிமை அமைப்பு சார்ந்த மணி அவர்கள் கலந்து கொண்டார்.

No comments:
Post a Comment