தமிழக அரசின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு இவைகளை கண்டித்து சேத்தியாத் தோப்பு கடைவீதியில் அதிமுகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் அதிமுக சார்பில் அரசுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேத்தியாத்தோப்பு அதிமுக நகரச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி எம்எல்ஏவுமாகிய ஆ.அருண்மொழிதேவன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் எம். பி. எஸ்.சிவசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளான பால் பொருட்களின் விலையேற்றம், மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு, மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு இவைகளைப் பற்றி அனைவரும் விளக்கமாக எடுத்துக் கூறினார். எம்எல்ஏ அருண்மொழிதேவன் அதிமுக அரசின் நலத்திட்டங்களான அம்மா உணவகம், அம்மா கிளினிக், மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி, கிராமப்புற ஏழை பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவித்தொகை தாலிக்குத் தங்கம் இது போன்ற பல திட்டங்களை நிறுத்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.
கடந்த ஆட்சியில் என்எல்சி நிலம் எடுப்புக்கு எதிராக போராடிய போது ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் பணமும், நிரந்தர வேலை என்று கோரிக்கை வைத்து குரல் கொடுத்த இன்றைய அமைச்சர் எம். ஆர் .கே. பன்னீர்செல்வம் இன்று அரசு வேலையெல்லாம் எதுவும் கிடையாது. என்எல்சி நிர்வாகம் கொடுக்கும் ஏக்கருக்கு 25 லட்ச ரூபாயை வாங்கிக் கொள்ளுமாறு கூறுகிறார். இதுபோல் ஆட்சியில் இருந்தால் ஒன்று இல்லாவிட்டால் ஒன்றுமாகப் பேசுகிறது திமுக என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக் கழக செயலாளர் சி.என்.சிவப்பிரகாசம், அதிமுக நிர்வாகிகள் ஜெயசீலன், ஒன்றிய துணைச் செயலாளர் பிரித்திவி. வீர மூர்த்தி, அண்ணா பிரபாகரன், வார்டு கவுன்சிலர் கே.பி.ஜி. கார்த்திகேயன், தலைமை நிலையப் பிரதிநிதி தெய்வ.ராஜகுரு, முன்னாள் நகரம் நன்மாறன், லட்சுமி நாராயணன், ஸ்ரீதர், ராமலிங்கம், கோழி. கோவிந்தசாமி, குணசேகரன், லலிதா பாலகுரு, சம்பத், ஆதனூர் பாலு, அஞ்சாபுலி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment