கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாக்காங்குடி கிராமத்தில் பூட்டி இருந்த வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 14 சவரன் தங்க நகையும், 2.75 லட்சம் ரொக்க பணமும் திருட்டு நடைபெற்றுள்ளது.
சாக்காங்குடி செல்லியம்மன் கோவில் தெருவில் கணவரை இழந்து தனியாக வசித்து வருபவர் லதா. இவர் கடந்த 27 ஆம் தேதி தனது மகள் பிரியங்காவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னைக்கு சென்று உள்ளார். சில நாட்களாக தங்கி இருந்து விட்டு நேற்று இரவு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டின் முன்பக்க கதவை திறந்து வீட்டினுள் சென்று உள்ளே பார்த்த போது பின்பக்க கதவு மற்றும் அறையின் ,அலமாரி பூட்டுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கீழே கிடந்துள்ளது.பீரோவில் இருந்த 14 பவுன் நகை, 2.75லட்சம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார் லதா. உடனடியாக அருகில் உள்ள ஒரத்தூர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். மேலும் மோப்ப நாய் ஸ்கூப்பர் கொள்ளை நடந்த வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு திருட்டு சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இது பற்றி வீட்டின் உரிமையாளர் லதா தெரிவிக்கும்போது தான் சீட்டு பணம் கட்டி வருவதாகவும் அந்த சீட்டு பணத்தில் 2.75 லட்சத்தை வீட்டில் வைத்துவிட்டு அவசரமாக மகள் வீட்டிற்கு சென்றதாகவும் திரும்பி வந்து பார்த்தபோது,14பவுன் நகையும் பணமும் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக சோகத்துடன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment