கடலூர் மாவட்டம் புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைகள் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவண ஜான்சி ராணி அவர்கள் தலைமை வகித்தார் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் முதுகலை ஆசிரியர் ஆர். ரேணுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்வில் புவனகிரி வட்டார சமூக நலத்துறை அலுவலர் புஷ்பவல்லி பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்தும் அவற்றிலிருந்து பெண்கள் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து உரையாற்றினார்.
மேலும் சமூக நலத்துறை தொட்டில் குழந்தைகள் திட்ட பாதுகாப்பு செவிலியர். புவனேஸ்வரி இரண்டு பெண் குழந்தைகள் திட்டம் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார் மேலும் குழந்தை திருமணம் முறை ஒழிப்பு குறித்தும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment