ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கடலூர் டவுன்ஹாலில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 December 2022

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கடலூர் டவுன்ஹாலில் நடைபெற்றது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கடலூர் டவுன்ஹாலில் நடைபெற்றது.



ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கடலூர் டவுன்ஹாலில் நடைபெற்றது இந்நிகழ்வில் மஐக்கிய ஜனாத தளம் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஜனதா சேகர் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்ல. ராமச்சந்திரன், செந்தில் முருகன், எஸ்.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். அணு உலை எதிர்ப்பு போராளி ஆண்டனி கோமாஸ் சிறப்புரையாற்றினார்.


நிகழ்ச்சியில் சிறப்பான ஏற்பாட்டை பொதுக்குழு கூட்ட ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் அன்பு அவர்கள் மேற்கொண்டார். கூட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 2023 தேசியத் தலைவர் நிதீஷ் குமார் அவர்களை அழைத்து ராமேஸ்வரத்தில் தேசிய அரசியல் ஒற்றுமை மாநாடு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.


 

முன்னாள் மாநிலத் தலைவர் ஜனதா சேகர் அவர்களை தேசிய செயலாளர் பொறுப்புக்கு இப்பொதுக்குழு மூலம் பரிந்துரை செய்தது செல்லா. ராமச்சந்திரன் அவர்களை தமிழ்நாடு பாராளுமன்ற குழு தலைவராக பரிந்துரை செய்தது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 1000 செயல்வீரர்களை வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தல் களப்பணியில் உருவாக்குவது பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.



மேலும் ஐக்கிய ஜனதா தளத்தின் தமிழ்நாடு தலைவராக மாநில பொதுக்குழுவில் லலிதா மோகன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அகில இந்திய ஐக்கிய ஜனதா தளம் நேரிட பொறுப்பாளராக ஆண்டன் கோமாஸ் அறிவித்தார்.

No comments:

Post a Comment

*/