புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் சேத்தியாத்தோப்பு நகர கழகம் சார்பில் அனுசரிப்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 December 2022

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் சேத்தியாத்தோப்பு நகர கழகம் சார்பில் அனுசரிப்பு

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் சேத்தியாத்தோப்பு நகர கழகம் சார்பில் அனுசரிப்பு


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அதிமுக நகர கழகம் சார்பில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு சேத்தியாத்தோப்பு நகர கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமாகிய அருண் மொழிதேவன் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற நகர கழக செயலாளர் எஸ் ஆர்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
மேலும் பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த 20 அடி உயர புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்தபிறகு தமிழக எதிர் கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரு மாகிய எடப்பாடி.கே. பழனிச்சாமி முதல்வராக வர வேண்டி உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டப் பிரதிநிதி தெய்வ.ராஜகுரு, முன்னாள் நகரச் செயலாளர் நன்மாறன்,கோழி. கோவிந்தசாமி, ராமலிங்கம், ஸ்ரீதர், குணசேகரன், லலிதா பாலகுரு, மாரியப்பன், அஞ்சாபுலி,சங்கர், வீரபாண்டியன் சம்பத், சிவக்குமார், சுதாகர், கோபால்,விஸ்வநாதன் மற்றும்ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

*/