கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே டி.புத்தூர், சேத்தியாத்தோப்பு அருகே பாழ்வாய்க்கால், சாத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100க்குமேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
மண்பாண்டம் செய்வதை பல தலைமுறைகளாக பாரம்பரியமாக செய்து வரும் இவர்கள் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானை,விறகு அடுப்பு, சட்டி, இப்படி நூற்றுக்கணக்கான வடிவங்களில் மண்பாண்ட பொருட்களை கலை நயத்தோடு செய்து வருகின்றனர்.
மேலும் நமது பாரம்பரிய மண்பாண்ட கலைஞர்கள் வளர்வதற்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். சுமார் ஒரு கிலோ களிமண்ணில் ஓராயிரம் வடிவங்களை சிற்ப்பமாக்கி கலை நயமிக்க பொருட்களை செதுக்கும் திறன் பெற்றவர்கள் மண்பாண்ட தொழிலாளர்கள். தற்போது நம்மிடையே மாறிவிட்ட கலாச்சார மாறுபாட்டில் மண்பாண்டங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து வருகிறோம். மண்பானையில் வைத்து குடிக்கும் தண்ணீருக்கு இன்றும் நல்ல வரவேற்பு உண்டு. ஒவ்வொருவரும் சற்று சிந்தித்து நம்மிடையே இப்போ, அப்பாவோ என ஊசலாடிக் கொண்டிருக்கும் மண்பாண்ட தொழிலை ஊக்குவித்து வளர்ச்சி அடைய வைக்க வேண்டும். அதனால் அகல் விளக்கு, மண்பானை, பொம்மைகள், உள்ளிட்ட பல்வேறு கைவினை தொழில்களை செய்து வரும்
கலைஞர்களையும், அவர்கள் குடும்பத்தையும் காப்பதன் மூலம் நமது ஆரோக்கியமும் மேம்படும். அந்த கஷ்ட ஜீவனம் செய்யும் தொழிலாளர்களுக்கு மூன்று வேளை உணவும் கிடைக்கும் என்பதே எதார்த்தமான உண்மை.


No comments:
Post a Comment