அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணி சென்றனர் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்கள் ஓய்வூதியர்கள் சங்கத்தினார் கூட்டமைப்பினர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வரும் தொகுப்பு ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தர செய்ய வேண்டும் வலியுறுத்தி ஆசிரியர்கள் ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ள பதவி உயர்நிலை வழங்க கோரியும் ஓய்வூதியர்களுக்கு அனைத்து பணம் பயன்களையும் வழங்க வேண்டும் என்பதை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களில் முன்னெடுத்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக பல்கலைக்கழக நிர்வாகம் அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவரும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக புறப்பட்டு வந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார் மனோகர் ரவி பேராசிரியர்கள் சுப்பிரமணியன் பாஸ்கர் இளங்கோ செல்வராஜ் முன்னிலை வகித்தனர் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை எழுப்பியும் பேரணியாக வந்தனர் அதன் ஒரு பகுதியாக சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சென்று கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்தனர்.

No comments:
Post a Comment