கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் கடலூர் மாவட்டத்தில் மாண்டாஸ் புயலினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வழங்கிய உத்தரவின்படி, அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
மேலும் பொக்லைன் இயந்திரம், மரம் அறுக்கும் இயந்திரம், கயிறு, மண்வெட்டி ஆகிய மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மாற்று சாலை போக்குவரத்தை முன்கூட்டியே கண்டறிந்து தங்குதடையின்றி போக்குவரத்து வாகனங்கள் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மழையினால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சமயத்தில் மருத்துவமனைக்கு உடனே சென்று கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடற்கரை காவல் நிலைய கிராமங்களில் புயலினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆட்டோ ஒளிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.


No comments:
Post a Comment