அகிலே இந்திய காங்கிரஸ் கட்சி வழிகாட்டுதல் குழு தலைவர் சோனியா காந்தி 76-வது பிறந்தநாள் விழா வை யொட்டி சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில்200 பேருக்கு அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சோனியாக காந்தி 76-வதுபிறந்த நாளை யொட்டி சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக அர்ஜனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர்மன்ற உறுப்பினரும் தில்லை.ஆர்.மக்கீன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பு என்கிற அன்பரசன் வரவேற்றார் மாவட்ட செயலாளர் தில்லை செல்வி மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் குமரவேல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சசிகுமார் கலைப்பிரிவு தலைவர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் பி.பி.கே சித்தார்த்தன் கலந்து கொண்டு ராஜீவ் காந்தி முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து 200 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம் என் .ராதா இனிப்பு வழங்கினார் பரங்கிப்பேட்டை வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நெல்சன் ஆகியோர் காந்தி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அண்ணாமலை நகர தலைவர் சக்திவேல்ஜெ. உலகநாதன் கே.வி.எம்.எஸ். கிருஷ்ணன் இளைஞர் அணியை சார்ந்த அருணாசலம் மகளிர் அணியைச் சேர்ந்த ஜனகம், இந்திரா அழகர்மாலா ராதா, உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொது செயலாளர் ஆட்டோ டி. குமார் நன்றி கூறினார்

No comments:
Post a Comment