விருத்தாசலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 December 2022

விருத்தாசலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து.

விருத்தாசலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து. 

விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலையில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையின் ஒருபுற ம் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் மறுபுறம் பணிகள் முழுவதும் முடிவடையாத நிலையில் சாலை கரடுமுரடாக இருந்து வருகிறது.


இந்நிலையில் நேற்று இரவு 9:30 மணி அளவில் விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி காலி அட்டை பெட்டிகள் ஏற்றி சென்ற லாரி ஒன்று சாலையில் கரடு முரடான வழியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. லாரியை ஓட்டி சென்ற ஓட்டுனர் காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். 


இந்த விபத்தால் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

*/