கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம், முருகன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 60 பேர் படித்து வந்த நிலையில் தற்போது 225 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியின் மொத்த பரப்பளவு 3,000 சதுர அடிக்கும் குறைவாகவே இருப்பதன் காரணமாக பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட முடியவில்லை; தற்பொழுது ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே வகுப்பறை கட்டிடம் உள்ளது. இரண்டு வகுப்புகள் திறந்த வெளியில் தான் நடக்கிறது.
மேலும் 35 ஆண்டுகளாக இந்த பள்ளிக்கு கழிப்பறை வசதி இல்லாமல் பெண்பிள்ளைகள் 200 மீட்டர் தூரம் கொண்ட வெள்ளாற்றங்கரைக்கு செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். மேலும் சட்டம், வேளாண்மை, ஆசிரியர் பணி, குடிமை பணி, தன்னார்வர்கள்,(என்.ஜி.ஓ), அரசியல் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.
இப்பள்ளியின் சிறப்பு மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம், விளையாட்டு, கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி ஆகிவைகளில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த வருடம் ஓவிய போட்டிக்கு மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்பள்ளியின் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளை விட கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கிறார்கள்.
ஆசிரியர்களின் கடுமையான உழைப்பு, முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு, முருகன்குடி தாய் பள்ளி வளர்ச்சி குழு, பள்ளி மேலாண்மை குழு, திருவள்ளுவர் தமிழர் மன்றம், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் என இப்பள்ளியின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் இரண்டு வகுப்பறை கட்டிடத்தில் தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த பகுதிகளை இப்பள்ளியின் ஆசிரியர்கள் தனது ஊதியத்திலிருந்து ஒரு பகுதியினை செலவு செய்து சீரமைத்து உள்ளனர். இந்தபணி என்பது மகாத்தானது பாராட்டுக்குரியது.


No comments:
Post a Comment