விருத்தாசலம் வானொலி திடலில் தி.மு.க கடலூர் மேற்கு மாவட்டம் , நகர தி.மு.க சார்பில் தி.மு.க முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பி.வி.பி முத்துக்குமார், திமுக நகர செயலாளர் தண்டபாணி நகரமன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ்,நகரமன்ற துணைத்தலைவர் ராணி தண்டபாணி, திமுக நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் சி.வெ. கணேசன் உரையாற்றும்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநிலத்தில் உள்ள 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை வழங்கியுள்ளார். முன்னாள் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் தமிழக விவசாயிகளை அந்த அரசு கண்டு கொள்ளவே இல்லை என்பதும் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மின் இணைப்பு பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கி விவசாயிகளுக்கு மிகப்பெரும் சேவை செய்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த விளங்குவதாக வார பத்திரிகைகள் வெளியிட்டு வருவதாக பேசினார். தமிழகத்தில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்கி, வேலையின்மை நிலையை தமிழக முதல்வர் ஒழித்து வருவதாகவும் கூறினார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக சேப்பாக்கம் தொகுதியில் மிக சிறப்பாக பணியாற்றி வந்ததாகவும், அந்தக் களப்பணியே அவருக்கு திமுக தலைமை அமைச்சர் பதவி வழங்கியதாகவும், எதிர்மறை விமர்சனங்களை கடந்து அவரது களப்பணி சிறப்பாக நடைபெறும் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர்கள் தக்கோலம் தேவபாலன், திருப்பூர் மனோகர் பாபு சிறப்புரை ஆற்றினர். மேலும் திமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர், திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment