வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவியுங்கள் குப்பைகளை துரிதமாக அகற்றப்படும் விருத்தாசலம் நகர மன்ற தலைவர் அதிரடி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 December 2022

வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவியுங்கள் குப்பைகளை துரிதமாக அகற்றப்படும் விருத்தாசலம் நகர மன்ற தலைவர் அதிரடி.

வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவியுங்கள் குப்பைகளை துரிதமாக அகற்றப்படும் விருத்தாசலம் நகர மன்ற தலைவர் அதிரடி.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி 33 வார்டுகளை வளர்ந்து வரும் பெருநகரங்களில் விருத்தாசலம் ஒன்று. முக்கிய புகழ்பெற்ற கோவில்கள் பெருமை வாய்ந்த செராமிக் தொழிற்சாலைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் நிறைந்த இந்த நகராட்சியில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 
விரைவில் மாவட்டமாகும் என எதிர்பார்க்கும் இந்நிலையில் நகர மன்ற தலைவராக பொறுப்பேற்ற டாக்டர் சங்கவி முருகதாஸ் பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அதில் ஒன்றாக குப்பைகள் எங்கு இருந்தாலும் தன்னுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு படம் அல்லது வீடியோ எடுத்து முகவரியுடன் அனுப்பி வைத்தால் உடனடியாக குப்பைகளை அகற்றி சரி செய்யபடும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். 

அதன் பலனாக பொதுமக்கள் தன் பகுதியில் அருகில் இருக்கும் குப்பைகளை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து நகர மன்ற தலைவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு பதிவிட்டு வருகின்றனர். இதை வாட்ஸ்அப் இதனை மூலம் தெரிந்து கொண்ட நகரமன்ற தலைவர் அந்தப் பகுதிக்கு நகராட்சி ஊழியர்களை சென்று குப்பைகளை உடனே சரி செய்ய உத்தரவிட்டு வருகிறார். இப்பதிவு விருத்தாசலம் மக்களிடையே பெரு வரவேற்பையும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/