விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி 1994 - 1997 ஆம் ஆண்டு விலங்கியல் துறை முன்னாள் மாணவர்கள் 25 வருடங்களுக்குப் பிறகு சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ராஜவேலு தலைமையில், அப்போதைய துறைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வெங்கடேசன் , முன்னாள் ஆங்கிலத் துறை தலைவர் கதிர்வேல் ,தற்போதய விலங்கியல் துறைத் தலைவர் செந்தில்குமார், பேராசிரியர்கள் முத்தழகி, சண்முகம், பவானி கல்லூரி முதல்வர் பாலமுருகன், கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாணவர்கள் ரவிக்குமார், வேல்முருகன், சுலைமான், சுரேஷ் அனைவரையும் ஒருங்கிணைத்தனர். சிங்கப்பூரிலிருந்து சித்ரா, கர்நாடகாவில் இருந்து பாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர். 45 பேரில், 40 பேர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். காலை 11 மணியிலிருந்து மதிய விருந்துடன், மாலை 4 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியயில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

No comments:
Post a Comment