விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை வட்டார வளமைய அலுவலகத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு டிசம்பர் மாதத்திற்கான குறைதீர்க் கற்பித்தல் பயிற்சி நடைபெற்றது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுநர் நாராயணசாமி, இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பாலமுருகன், ஆசிரியர்கள் சேகர், மேரி அருள் செல்வி ஆகியோர்கள் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சி மையத்தை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி ராமகிருஷ்ணன் அலுவலர் அவர்கள் பயிற்சி மையத்தைப் பார்வையிட்டதுடன் தன்னார்வலர்களுடன் பயிற்சி குறித்தும் பயிற்சியின் பயன்கள் குறித்தும் கலந்துரையாடினார். உடன் மாவட்டத் திட்ட அலுவலர் சுந்தரேசன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியின்
முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். தொடர்ந்து தன்னார்வலர்களுக்கான பயிற்சி கட்டகம், அடைவுத் திறன் அட்டை வழங்கப்பட்டது. இதில் புதுக்கூரைப்பேட்டை மற்றும் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி குறுவளமையத்தைச் சார்ந்த 50 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பயிற்சியில் பங்கேற்று பயனடைந்தனர்.

No comments:
Post a Comment