காட்டுமன்னார்கோவிலில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 December 2022

காட்டுமன்னார்கோவிலில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம்.

காட்டுமன்னார்கோவிலில் திமுக ஆட்சியின் விலைவாசி உயர்வு மற்றும் சட்டம்ஒழுங்கு சீர்கேடு இவைகளைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடியாரின் ஆனைக்கிணங்க, ஆளும் திமுக அரசின் பால் விலை உயர்வு, சொத்து வரிஉயர்வு, மின்சார கட்டண உயர்வு இவைகளை திரும்பப் பெறக் கோரியும் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காட்டுமன்னார்கோவில் முன்னாள் எம்எல்ஏ, கழக அமைப்புச் செயலாளர் முருகுமாறன் தலைமை தாங்கினார். காட்டுமன்னார் கோவில் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வாசு. முருகையன் முன்னிலை வகிக்க, மேற்கு ஒன்றியச் செயலாளர் எம் .என்.சிவக்குமார் வரவேற்புரை யாற்றினார். கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமாகிய கே.ஏ. பாண்டியன் கண்டன உரையாற்றினார். நகரச் செயலாளர் எம்ஜிஆர் தாசன் நன்றியுரையாற்றினார்.

 

மேலும் ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகளும் கழகத் தொண்டர்களும் பெருமளவில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்.

No comments:

Post a Comment

*/