சேத்தியாத்தோப்பில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 December 2022

சேத்தியாத்தோப்பில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம்.

சேத்தியாத்தோப்பில்  திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம்.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில்  திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புவனகிரி ஒன்றியப் பெருந்தலைவர் சி.என். சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி கண்டன உரையாற்றினார். 


சொத்து வரிஉயர்வு,மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு இப்படியான விஷயங்களைப் பற்றிபேசப்பட்டது. மற்றும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை நிறுத்திவிட்டதாகவும் திமுக மீது குறை கூறி நிர்வாகிகள் பேசினர். கடந்த அதிமுகஆட்சி காலத்தில் தாலிக்குத் தங்கம் திட்டம்,மகளிர்க்கான விலையில்லா ஸ்கூட்டர், மடிக்கணினி , மாணவர்களுக்கான கல்வி உபகரண பொருட்கள் இப்படி எண்ணற்ற திட்டங்களை சொல்லி ஆட்சிக்கு வந்தவர் சொல்லியதை சொல்லியபடியே செய்து கொடுத்தார்  எடப்பாடி கே.பழனிச்சாமி அவரின் வழியில் அப்படியே நல்லாட்சி புரிந்தார். 

இக்கூட்டத்தில் புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், மேற்கு ஒன்றிய துணை  துணைச் செயலாளர் E.G.பிரித்திவி திரு  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன்,  ஊராட்சி கழக செயலாளர் ஜெயசீலன், சேத்தியாதோப்பு நகர செயலாளர் மணிகண்டன், தலைமைக் கழக பிரதிநிதி தெய்வ ராஜகுரு, முன்னாள் நகரச் செயலாளர் நன்மாறன், சேத்தியாத்தோப்புபேரூராட்சி கவுன்சிலர் கே பி ஜி. கார்த்திகேயன், லட்சுமி நாராயணன்,சிவஞானம், சத்குரு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் கட்சித் தொண்டர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

*/