கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் தென்குத்து வருவாய் கிராம எல்லைக்கு உட்பட்ட ஆர். கே .சிட்டியில் வசித்து வருபவர் தனுஷ் வயது 31 தனக்கு சொந்தமான வீட்டு மனைக்கு சர்வே எண் 145/9 இடத்தில் உட்பிரிவு செய்து பட்டா வழங்க கோரி குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியர் கீதா அவர்களிடம் கடந்த 15/09/2020. அன்று மனு அளித்துள்ளார் மூன்று மாத இடைவெளிக்கு பின் மனுவின் நிலை குறித்து குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலக ஊழியர்களிடம் விசாரித்த போது வட்டாட்சியர் மனு தொலைந்து விட்டதாக கூறப்பட்டதால் மிண்டும் இரண்டாவது முறையாக வருவாய் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி அவர்களிடம் 04/02/2021 அன்று மீண்டும் ஒரு மனு அளித்துள்ளார் மேலும் மேற்படி 25/11/2021 அன்று குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களின் குறை தீர்ப்பு கூட்டத்திலும் மனு அளித்துள்ளார்.
மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மீண்டும் குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு வின் நிலை குறித்து கேட்டபோது குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மிகுந்த கவனக்குறைவாக மனு மீண்டும் காணவில்லை என்று அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வட்டாட்சியராக மூன்றாவதாக பொறுப்பேற்ற சையது அப்தஹிர் அவர்களிடம் 24/12/2021. மீண்டும் ஒரு மனு கொடுத்துள்ளார் பின்னர் இந்த மூன்றாவது மனுவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு அவர்களுக்கு மனையை உட்பிரிவு செய்து பட்டா வழங்க கடந்த 18/02/2022 பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டதாக தலைமை நில அளவையர் ரகோத்தமன் மற்றும் பிரிவு அலூவலர் A3 பிரகாஷ் ஆகியோர் தபால் பதிவேட்டை காண்பித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது .
பின்னர் இச்சம்பவம் குறித்து கோட்டாட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் ஆனந்த் அவர்களிடம் தெரிவித்த பொழுது அவர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றது நீங்கள் மீண்டும் புதிதாக ஒரு மனு செய்து குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியர் மூலம் அனுப்பச் சொல்லுங்கள் உடனடியாக உங்கள் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தார்.
மீண்டும் புதியதாக பொறுப்பேற்று தற்பொழுது பணியில் உள்ள வருவாய் வட்டாட்சியர் சுரேஷ் குமார் அவர்களிடம் 25/04/2022.அன்று மீண்டும் ஒரு மனு கொடுத்துள்ளார் அந்த மனு மீது தென்குத்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் குறிஞ்சிப்பாடி வருவாய் ஆய்வாளர் மற்றும் தலைமை நில அளவையர் ,நில அளவையர், ஆகியோர்கள் விசாரணை மேற்கொண்டு 30/05/2022
அன்று விசாரணையின் அறிக்கையை கம்ப்யூட்டர் லாகின் மூலம் A3 பிரகாஷ் அலூவலர் மூலம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
தனிநபர் கொடுத்த சர்வே எண் ணில் மனு கொடுக்காத ஒரு சிலரின் உட்பிரிவு எண்ணையும் சேர்த்து ரூபாய் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை புரோக்கர்கள் மூலம் கையூட்டு பெற்றுக் கொண்டு சேர்க்கப்பட்டு கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு பரிந்துரைக்கு அனுப்பட்டதாக தெரியவந்தது இது நாள் வரை தனிநபர் கொடுத்த மனுவிற்கு தீர்வு எட்டப்படவில்லை தனுஷ் என்பவர் பலமுறை கோட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று மனுவின் நிலையை குறித்து கடலூர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஆனந்த் மற்றும் உட்பிரிவு அலுவலர் A7 கரிகாலன் ஆகியோரிடம் கேட்ட பொழுது கடைசியாக அனுப்பிய கோப்பு இப்பொழுது தான் இங்கு வந்துள்ளது எனவும் கோட்டாட்சியர் திருமண விடுப்பில் சென்றுள்ளதால் அவரின் உத்தரவுக்காக டேபிளில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
பின்னர் 16/05/2022 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள கோட்டாட்சியர் அதியமான் கவியரசு அவர்களின் உத்தரவு அடிப்படையில் 145 சர்வே எண்ணில் உள்ள 11 உட்பிரிவுகளில் 9 உட்பிரிவுகளை மட்டும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது உட்பிரிவுக்கு பணம் கொடுக்காததால் ஏதோ ஒரு காரணத்தை கூறி உட்பிரிவு எண் 145/9 கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது இதுகுறித்து விளக்கம் கேட்டால் எந்த ஒரு பதிலும் இல்லை அதற்கு மாறாக மீண்டும் ஒருமுறை புதிதாக குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து லாகின் செய்து அனுப்புங்கள் என்று வித்ததாக கூறப்படுகிறது.
கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பிறப்பித்த ஆணையில் குளறுபடி உள்ளது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளாத தெரிகிறது. மீதமுள்ள அனைத்து உட்பிரிவுகளையும் களஆய்வு செய்ததில் அதிலும் பல குழப்பங்கள் நிலவுகின்றது
தனிநபர் கொடுத்த மனு தொலைந்து விட்டது என்று கூறி மீண்டும் மீண்டும் மனு கொடுக்கச் சொல்லி அத்துடன் மனு கொடுக்காத ஒரு சில நபர்களின் உட்பிரிவு எண்களையும் இணைத்து அவர்களுக்கு உட்பிரிவு செய்து பட்டா வழங்க கணினியில் பதிவேற்றம் செய்து தனிப்பட்ட நபரை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் A7 கரிகாலன் ஆகியோர் மீது துரை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனிநபரின் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவருக்கு தெரியப்படுத்தவும் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு அவர்களிடம் 14/12/2022 அன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்று ஒரே பதவியில் அரசு விதிகளுக்கு மாறாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயணித்துக் கொண்டு பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கி வரும் வருவாய்த்துறை ஊழியர்கள் மீது துரை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு பணியிட மாற்றம் செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்படும் பல மனுக்கள் காணாமல் போகும் நிலை தொடர்கதையாகி வருகிறது.
அரசு அலுவலகங்களில் முக்கிய கோப்புகளை பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகின்ற அலுவலகத்திலேயே பொதுமக்கள் கொடுக்கும் மனு அடிக்கடி தொலைவதும் மனு கொடுக்காத ஒரு சில நபர்களின் வேலைகள் உடனடியாக முடிக்கப்படுவதும் பொதுமக்களிடையே மிகுந்த சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அண்மையில் பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் கேட்பதாக விவசாயி ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் லஞ்ச பெற முயன்ற சர்வேயர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment