இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் கோ.சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமை வகித்தார். வடலூர் நகரச் செயலாளர் சி.எஸ். பாபு அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
கழக அமைப்புச் செயலாளர் சொரத்தூர் இரா.ராஜேந்திரன் அவர்கள் மற்றும் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் எம்.பி.எஸ் சிவசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினர்.
மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன் அவர்கள் பேசுகையில்
மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு பால் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர்கள் வடலூர் நகர நிர்வாகிகள் வார்டு செயலாளர் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment