பாஜகவின் கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன் அவர்கள் தலைமையில் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பாஜகவின் மாநில செயலாளர் மாவட்ட பார்வையாளருமான அஷ்வத்தாமன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, வலுவான பூத் கமிட்டி அமைப்பது, பூரண மண்டல் அமைப்பது, பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது உட்பட பல்வேறு ஆலோசனைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அணி பிரிவு நிர்வாகிகள், மாவட்டத் துணைத் தலைவர்கள், மாவட்ட பொது செயலாளர்கள், மாவட்ட பொருளாளர், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அணி தலைவர்கள் பொதுச் செயலாளர்கள், மாவட்ட பிரிவு தலைவர்கள் துணைத் தலைவர்கள்,
நகர, ஒன்றிய தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment