பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்து – கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ நிவாரணம் வழங்கினார்… - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 December 2022

பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்து – கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ நிவாரணம் வழங்கினார்…

பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்து – கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ நிவாரணம் வழங்கினார்.


சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மணிகொல்லை ஊராட்சி, பால்வாத்துன்னான் கிராமத்தின் கிழக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது  கூரை வீடு  நேற்று தீப்பிடித்து எரிந்து  முற்றுலும் சேதமடைந்தது. 


ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் உதவிகளை வழங்கினார்.


உடன் பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் கோவி.ராசாங்கம், அ.தி.மு.க நிர்வாகியும் அகத்தியர் பவுண்டேஷன் தலைவருமான ஈஸ்வர் ராஜலிங்கம், மாவட்ட கழக இணை செயலாளர் எம்.ரெங்கம்மாள்,  பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெ.வசந்த், ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி,   ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தஜோதி சுதாகர், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

*/