மண்பாண்ட பொருட்களை வழங்கி எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள். அரசுக்குமண்பாண்டதொழிலாளர்கள் கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 December 2022

மண்பாண்ட பொருட்களை வழங்கி எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள். அரசுக்குமண்பாண்டதொழிலாளர்கள் கோரிக்கை.

மண்பாண்ட பொருட்களை வழங்கி எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்.  அரசுக்குமண்பாண்டதொழிலாளர்கள் கோரிக்கை.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பாழ்வாய்க்கால், சாத்தமங்கலம் மற்றும் டி. புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலை மட்டுமே நம்பி இருந்து வருகின்றனர். இருந்தாலும் தங்கள் வாழ்வில் எந்தவிதஏற்றமும் மாற்றமும்இல்லை எனக் கூறும் இவர்கள்


தற்போது பொங்கல் பண்டிகையான தமிழர்கள் பாரம்பரிய விழாவில் தமிழக அரசு வழங்கும் பொங்கல்  தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை செங்கரும்பு ,ரூபாய் ஆயிரம் ரொக்கம் இவற்றுடன்மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானை, சட்டிகள், அடுப்பு ஆகியவைகளை அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கினால் இந்த மண்ணையே நம்பி தொழில் செய்து ஜீவனம் நடத்தி வரும் நாங்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் எனக் கூறுகின்றனர். 


தங்கள் பகுதிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் மண்பாண்டங்கள் குறித்து கேட்டு அறிந்து அதன் பயன்கள் பற்றிப் புரிந்து தங்களுக்குத் தேவையான மண்பாண்டங்களை வாங்கிச் செல்கின்றனர்.வெளிநாட்டினர் விரும்பி வந்து மண்பாண்ட பொருட்களை வாங்கும் போது, இங்கு இருக்கும் அரசு ஏன் மண்பாண்ட தொழிலாளர்கள் குறித்து எவ்விதமான அக்கறையும் கொள்ளாமல் இருந்து வருகிறது எனவும்,  இந்த பொங்கல் பரிசு தொகுப்போடு மண்பாண்டங்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கி அழிந்து வரும் மண்பாண்ட தொழிலையும் தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/