பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 December 2022

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்பு

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்பு



பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா பரங்கிப்பேட்டையில் நடைபெற்றது இதற்கு தொழிலதிபர் முகமது ஹனிபா தலைமை தாங்கினார். கேப்டன் பாபா பக்ருதீன் வரவேற்றார்.அகமது கபீர் காஷிபி தல்பாதர் மறைக்காயர் முகமது சாபீ வக்கீல்சையது அன்சாரி ஆகிய முன்னிலை வகித்தனர்.



விழாவில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவராக கேப்டன் ஹாஜி ஹமீது அப்துல் காதர் பொறுப்பேற்றுக் கொண்டார் பதவி பிரமாணத்தை அப்துல் காதர் மரைக்காயர் செய்து வைத்தார் தொடர்ந்து இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் துணைத் தலைவர்கள் செயலாளர்கள் பொருளாளர்கள் சட்ட ஆலோசர்கள் மற்றும் பைத்தூமால் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் பதவி ஏற்று கொண்டனர் விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கேஏ பாண்டியன் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினார்.


நிகழ்ச்சியின் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ராசாங்கம் நகர செயலாளர் மாரிமுத்து கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த் கிள்ளை நகர செயலாளர் தமிழரசன் மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்த ஜோதி சுதாகர் மேற்கு ஒன்றிய அவை தலைவர் ரங்கசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் அப்துல் பாசித் நன்றி கூறினார்

No comments:

Post a Comment

*/