குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராமமக்கள் ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 December 2022

குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராமமக்கள் ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராமமக்கள் ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் ஈச்சம்பூண்டி ஊராட்சியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் மோட்டார் பழுது அடைந்துள்ளது, அந்த பழுதை நீக்கி சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் சுணக்கம் கட்டி வருகின்றனர்.


கடந்த சுதந்திர தின அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளதை சுட்டிக்காட்டி கை பம்புகள் அமைத்து தர வைக்கப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆனால் இதுவரை எவ்வித வேலைகளும் நடைபெறவில்லை என்பதுதான் பொதுமக்களின் வேதனை.


இதேபோல் தெருவிளக்குகள் கடந்த எட்டு மாதங்களாக பகலிலும் எரிந்து கொண்டு உள்ளது இதை சரிசெய்யவும் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை குடிதண்ணீர் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் ஆகவே போர்க்கால அடிப்படையில் துரிதமாக பழுதினை நீக்கி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

*/