வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி மாநில தழுவிய சுத்த சன்மார்க்க அன்பர்கள் சார்பில் உண்மை விளக்கப் பெருந்திரள் கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 December 2022

வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி மாநில தழுவிய சுத்த சன்மார்க்க அன்பர்கள் சார்பில் உண்மை விளக்கப் பெருந்திரள் கூட்டம்

வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி மாநில தழுவிய சுத்த சன்மார்க்க அன்பர்கள் சார்பில் உண்மை விளக்கப் பெருந்திரள் கூட்டம் நடைபெற்றது . 


திரு அருட்பிரகாச வள்ளலாரின் வரலாற்றை உண்மை தெரியாமல் அவதூறாக பேசிய திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த v.அரசை கைது செய்ய வலியுறுத்தியும் 


வடலூர் பகுதியில் உள்ள மதுக்கடை,மாமிசக்கடைகளை  அகற்றி வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி மாநிலம் தழுவிய சுத்த சன்மார்க்க அண்பர்கள் சார்பில் உண்மை விளக்க பெருந்திறல் கூட்டம் வடலூர் வள்ளலார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில் சன்மார்க்க சங்க தலைவர் MK பார்த்திபன் தலைமை வகித்தார். வள்ளலார் மன்ற தலைவர் கண்ணதாசன் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஜெய்.அண்ணாமலை பரதேசி, மேட்டுப்பாளையம் புலவர் K.ஞானதுரை, மேட்டுக்குப்பம் வள்ளலார் புரட்சி படை சாது.மகாதேவன், சாது.ஜானகிராமன், மு.பா.பாபு மற்றும் அ.குஞ்சிதபாதம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்ச்சியில் புதுச்சேரி கடலூர் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த சன்மார்க்க நண்பர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாய் கைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.


நிகழ்ச்சியில் வள்ளலார் வாழ்ந்த பூண்ணிய பூமியை மாமிசமில்ல நகரமாக அறிவிக்க வேண்டும்


பல வருடங்களாக தனிநபர்கலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பார்வதிபுரம் கிராம மக்கள் வள்ளலார் சன்மார்க்க நிலையத்திற்கு வழங்கிய 80 காணி நிலைத்தை மிட்டு எடுக்க வேண்டும் எனவும்.


வள்ளலார் பற்றி அவதூறாக பேசிய திராவிட விடுதலைக் கழகத்தை சேர்ந்த V.அரசை கைது செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது

No comments:

Post a Comment

*/