வடலூர் நகராட்சியில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 December 2022

வடலூர் நகராட்சியில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

வடலூர் நகராட்சியில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது


வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல்  மகாபலிபுரம்  அருகே இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் 


புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி,  பேரூராட்சி ,ஊராட்சி ஆகிய அனைத்து பகுதிகளிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது 


இந்நிலையில் வடலூர் நகராட்சி சார்பில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக


 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ள பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களையும் பணியாளர்கள் சோதனை மேற்கொண்டு தயார் நிலையில் வைத்துள்ளனர்


ஜெனரேட்டர்கள் மணல் மூட்டைகள் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மரம் வெட்டும் இயந்திரங்கள் ஆகியவை சோதனை மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது 


இதனை வடலூர் நகராட்சி ஆணையர் மற்றும் வடலூர் நகர்மன்ற தலைவர் பார்வையிட்டனர்

No comments:

Post a Comment

*/