கடலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையினால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து உள்ளது இந்நிலையில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் முதல் ஆபத்தானபுரம் வரையில் நடுவே சாலைகளில் மழை நீர் தேங்கியவாறு குண்டும் குழியுமாக மோசமான நிலையில் காட்சியளிக்கிறது.
நெடுஞ்சாலை என்பதால் இவ்வழியே சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அதிக அளவில் தினமும் கடந்து செல்கின்றன
இவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்
மழையின் போது சாலைகளில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்குவதால் இருசக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமைடைந்து வருகின்றனர்
மேலும் நடந்து செல்லூம் பொதுமக்கள் மீது சாலைகளில் செல்லும் பேருந்துகள் சேற்றை வாரி அடித்து செல்கின்றன
எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தற்காலிகமாக சாலையை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

No comments:
Post a Comment