கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுகுப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா, பாராட்டு விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தேசிய விருது பெற்ற எழுத்தாளர் இமயம் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசுகையில் இயேசு கிறிஸ்து பிறப்பினால் தான் நாம் தினந்தோறும் ஆங்கில தேதி காலண்டர் நமக்கு கிடைத்தது என்று குறிப்பிட்டார். மேலும் ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் ஏழை எளிய சாதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமான கல்வி கிடைத்தது என்று கூறினார்.
குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் தேசிய விருது வழங்கப்பட்டமைக்கு இமயம் அவர்களுக்கு பள்ளியின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் போதகர் பர்னபாஸ் பால் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் இரண்டாவது முறையாக டாக்டர் பட்டம் பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் டாக்டர் வி. எம். பிரேம்குமார் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.
வனத்துறையில் பணியாற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர் திருமாறன் அவர்கள் ரூபாய் 43,000 மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை ஜான் பிராங்கிளின் அருள்தாஸ் ஆசிரியர் ஒருங்கிணைப்பு செய்தார். கலை நிகழ்ச்சிகளை ஆசிரியர் சங்கீதா ஜெபமலர் ஒருங்கிணைத்தார்.
விழாவின் இறுதி நிகழ்ச்சியான கிறிஸ்து பிறப்பின் முன்னணி நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. இதில் விருத்தாசலம் கஸ்பா நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிடியன் எபினேசர் பாக்கியராஜ், புதுக்குப்பம் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேம் கெம்பீரநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முரளி, ஆசிரியர் சங்கத் தலைவர் ஆல்பர்ட் வின்சன்ட் தாமஸ், ஆசிரியர்கள் ஷீபா , ராபர்ட் ,பெல்ஷியா, ஆடலினஜோஸ்பின், கலைத்தாமரை, ஆல்ரின், லாரன்ஸ், நான்சி, ஆனந்த், சித்ரா, தேவதாஸ், சத்யராஜ் , ராதாகிருஷ்ணன், லிண்டா, ஆக்னஸ், சுரேஷ் , தனகோபால், இந்துமதி, சுபத்ரா, கல்பனா, யோனாஸ் , ஜாய்ஸ் தீபகலா, சுகுணா ஆகியோர் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சியின் முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சாலமோன் நன்றி கூறினார்

No comments:
Post a Comment