கடலூர் மாவட்டம் புவனகிரி அருகேயுள்ள மஞ்சக் கொல்லைகிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளிக்கு புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியான 17.50 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி கட்டிடம் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் முடிவுற்றபின் அதன் திறப்பு விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் அதிமுக ஒன்றியப் பெருந்தலைவர் சி என். சிவப்பிரகாசம், ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன்,ஒன்றிய கழகச் செயலாளர் சீனிவாசன், உமா மகேஸ்வரன், சேத்தியாத்தோப்பு நகரச் செயலாளர் மணிகண்டன் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் விநாயகமூர்த்தி,ஜெயசீலன், வீர மூர்த்தி, சாமிநாதன், பிரபாகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர். அறிவுமதி , பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம பொதுமக்கள், கல்வியாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக தன்னார்வலர்கள் புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளிக்கு மாணவர்களின் கல்விக்கு உதவிடும் வகையில் ஸ்பீக்கர் செட்ஒன்றை அன்பளிப்பாக கொடுத்தனர்.


No comments:
Post a Comment