இரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று கடலூர் துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
மீன்சந்தையில் விற்கப்படும் மீன்கள் நீண்டநாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க ஒருசில வியாபாரிகள் சோடியம் பென்சோயேட் , பார்மல்டிஹைடு, அமோனியா போன்ற இரசாயன கலவைகள் பூசி மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த இரசாயனம் கலந்து மீன்களை சாப்பிடுவதால் பொது மக்களுக்கு பல்வேறு வகையான உடல் உபாதைகள் உருவாகும் நிலை இருக்கின்றது. இதனை தடுக்க மீன்வளத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் அவ்வப்பொழுது மேற்கொண்டு வருகின்றனர் அதில் ஒரு பகுதியாக 29.12.2022 இன்று கடலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் திரு. சி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் மீன்வளத் துறை ஆய்வாளர் திரு .சதுருதீன் கடலோர அமலாக்க பிரிவு காவலர்கள் மற்றும் சாகர் மித்ரா பணியாளர்கள் அடங்கிய குழு கடலூர் துறைமுகத்தில் உள்ள மீன்சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களில் இரசாயனக்கலவை ஏதேனும் பூசப்பட்டுள்ளது என்பதையும் மீன்கள் தரமாக உட்கொள்வதற்கு ஏற்றதாக உள்ளதா என்பதையும் மீன்வளத்துறை அலுவலர்கள் ஒரு ஒரு கடையாக ஆய்வு செய்தனர் ஆய்வின் போது மீன்சந்தையில் தரமற்ற மீன்கள் மற்றும் இரசாயனம் பூசிய மீன்கள் ஏதும் விற்கப்படவில்லை என உறுதிசெய்தனர். மேலும் மீன்வியாபாரிகளால் தரமற்ற மற்றும் இரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அணைத்து மீன்வியாபாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்

No comments:
Post a Comment