புவனகிரி டிசம்பர்- 28 கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம், அழிச்சிகுடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை 585 பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சார் ஆட்சியர் ஸ்வேதா சுமன் வரவேற்புரை நிகழ்த்தினார் கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசும் போது தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்துள்ள புதுமைப் பெண் திட்டம் குறித்து சிறப்பாக பேசினார்.
பெண்களின் முன்னேற்றம் பெண் கல்வி இவைகளின் சிறப்பு குறித்து பேசினார் பெண்கள் கண்டிப்பாக உயர் கல்வி பெற வேண்டும் அதுதான் உண்மையான சமுதாய மறுமலர்ச்சி என்றும் இன்று அரசு பள்ளி மாணவிகள் எல்லோருக்கும் நம்முடைய வாழ்நாள் முழுவதும் கடைசி வரை வரக்கூடியது கல்வி மட்டும் தான் என்று கல்வியின் சிறப்பு பற்றி பேசினார் நமது மாவட்டத்தில் 104 கல்லூரிகள் உள்ளது அதில் அனைவருக்கும் நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கிறோம் மாவட்டத்தில் ஒரு லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் பேசினார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர் .கே. பன்னீர்செல்வம் பேசுகையில் மக்களை நாடி அரசாங்கம் சென்று கொண்டிருக்கிறது. நமது முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு திட்டமும் எவ்வாறு செயல்படுகிறது என்று கண்காணித்து வருகிறார் பொதுமக்களே எந்தத் திட்டத்தில் என்னென்ன பயன் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் நம்முடைய முதல்வர் அவர்கள் நேரடியாக கண்காணித்து வருகிறார் அதேபோல் எனது துறையான வேளாண்மை துறையில் உழவன் ஆப் என்ற பட்டனை தட்டினால் எத்தனை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள் எந்தெந்த உரக்கடைகளில் உரம் இருப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் ஆப் செயல்பட்டு வருகிறது என்று நாங்கள் மக்களை தினம் சந்தித்து வருகிறோம் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி ஆளுங்கட்சியாக வந்தபோதும் சரி மக்களை தினம் தினம் சந்தித்து பணியாற்றி வருகிறோம் எங்களை எங்கள் தலைவர் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்போது சிலர் புலம்புகிறார்கள் என்.எல்.சி நிறுவனத்திற்கு பூட்டு போடப் போகிறார்களாம் என்.எல்.சி யை பூட்டிவிட்டால் என்ன ஆகும் எல்லாம் இருட்டில் தான் கிடக்கணும் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியுமா சம்சாரம் இல்லாமல் இருந்திடலாம் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்று நகைச்சுவையோடு பேசினார்.
மேலும் 585 பயனாளிகளுக்கு ரூபாய் 2.91.151028/. திட்ட மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் தையல் இயந்திரம். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் 27 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் குடிமைப் பொருள் திட்டம் மூலம் 35 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை . தோட்டக்கலைத் துறை மூலம் கைத்தெளிப்பான் சொட்டு நீர் பாசனம். மாடித்தோட்டம் முருங்கை விதை தக்காளி விதை போன்ற பல்வேறு பொருள்களை வழங்கி சிறப்பாக பேசினார்.
மேலும் நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி /திட்ட இயக்குனர் பவன் குமார் . கிரியப்பனவர்.தனி துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்பு திட்டம் ) கற்பகம் புவனகிரி வட்டாட்சியர் ரம்யா.மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ .எஸ். மதியழகன் கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவர் தா. கந்தன் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மன்ற தலைவர் தங்க குலோத்துங்கன் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வராஜ்.செல்வகுமார் ஜெயமாலா மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment