குறிஞ்சிப்பாடி பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்கும் பணி தீவிரம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 December 2022

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்கும் பணி தீவிரம்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்


குறிஞ்சிப்பாடி பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித் திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பன்றிகள் அடிக்கடி பொதுமக்களை கடித்து காயம் ஏற்படுத்துவதாக அண்மையில் நடந்த குறிஞ்சிப்பாடி நகர சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார்கள் தெரிவித்ததின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட பேரூராட்சி நிர்வாகம்


பேரூராட்சி ஊழியர்களை வைத்து குறிஞ்சிப்பாடி பகுதிகளில் பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் ,துப்புரவு ஆய்வாளர் குருசங்கர் மற்றும் இளநிலை ஆய்வாளர் முருகவேல் அவர்களின் மேற்பார்வையில் குறிஞ்சிப்பாடி நகர் பகுதிகளில் சுற்றி தெரியும் பன்றிகள் பிடிக்கும் பணி  தற்பொழுது நடைபெற்று வருகிறது. 

No comments:

Post a Comment

*/