கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டிகுப்பம் கடைவீதிபகுதியில் அரசுதடை விதித்துள்ள புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா உத்தரவின் பேரில் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையில் சப்-–இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் முத்தாண்டிக்குப்பம் சின்ராசு (34) என்பவரது கடையில் இருந்து மூட்டை, மூட்டையாக அடுக்கி உள்ள வைக்கப்பட்டிருந்த 130கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்ககுபதிவு செய்து சின்ராசு வைகைது செய்தனர். புகையிலை பொருட்கள் எப்படி கிடைத்தது யார்யாருக்கு விற்பனை செய்துள்ளார் என்பது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். பண்ருட்டி வருவாய் தாசில்தார் வெற்றிவேல் கடைக்கு சீல்வைத்தார்.


No comments:
Post a Comment