குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட சுமார் 300 கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் குறிஞ்சிப்பாடி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மூலம் சமூக வளைகாப்பு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 December 2022

குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட சுமார் 300 கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் குறிஞ்சிப்பாடி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மூலம் சமூக வளைகாப்பு விழா


குறிஞ்சிப்பாடி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமூக வளைகாப்பு விழா வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட சுமார் 300 கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் குறிஞ்சிப்பாடி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மூலம் சமூக வளைகாப்பு விழா கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்

மேலும் நிகழ்ச்சியில் அமைச்சர் அவர்கள் பேசுகையில் மகளிர் நலன் கருதி இலவச பேருந்து வசதியை தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்
இதனால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மகளிர் பயனடைந்து வருகின்றனர் எனவும்
அரசு சார்பில் கர்ப்பிணிகள் அனைவருக்கும் சமூக பழைய காப்பு திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் இதனால் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் வேறு காலத்தில் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 18000 நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகின்றது

மேலும் கடலூர் மாவட்டத்தில் 70 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளதாகவும் அதில் கர்ப்பிணிப் பெண்களுக்கு என்று தனி சிகிச்சை முறை மற்றும் உடல் பரிசோதனை மேற்கொள்ள பல புதிய வசதிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ள பட்டுள்ளது என்று தெரிவித்தார் மேலும் தற்பொழுது பரவி வரும் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் கர்ப்பிணிப் பெண்கள் இதை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்

நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட சார் ஆட்சியர் அதியமான் கவியரசு, மாவட்ட நோய் தடுப்பு மற்றும் மருந்து துறை இணை இயக்குனர் மீரா, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு வட்டார மருத்துவ அலுவலர் அகிலா,குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சுரேஷ்குமார் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் நகர மன்ற தலைவர் சிவகுமார் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/