குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கேட் அருகே உயிர் பலி வாங்க காத்திருக்கும் காங்கிரீட் கம்பிகள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 December 2022

குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கேட் அருகே உயிர் பலி வாங்க காத்திருக்கும் காங்கிரீட் கம்பிகள்.

குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கேட் அருகே உயிர் பலி வாங்க காத்திருக்கும் காங்கிரீட் கம்பிகள். 


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் பகுதியில் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது இந்த கட்டிடத்திற்கு அருகே நீதிமன்ற வளாகம் மற்றும் அங்கன்வாடி மைய அலுவலகம் ஆகிய அரசு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.


இப்பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி சாலைகளின் இரு புறங்களும் நடைபெற்ற வருகின்றது இதற்காக சாலைகளில் உள்ள ஆக்கிரமிகள் அகற்றப்பட்டு கழிவுநீர் வாய்க்கால் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் போடப்பட்ட கான்கிரீடடில் உள்ள கம்பிகள் வெளியே நீட்டியவாறு அலுவலகத்தில் நுழைவு வாயில் அருகே உள்ளது மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வழியை பயன்படுத்தி வருவதால் சிலர் நிலை தடுமாறி கம்பிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவே விபத்து ஏற்படும் முன் இதனை சரி செய்து ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment

*/