கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சத்யராஜ் வரவேற்புரை ஆற்றினார். கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சீதா லட்சுமி வீராசாமி தலைமை தாங்கினார்.
விருத்தாசலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சி மன்ற துணை தலைவர் சுப்பிரமணியன் மாவட்ட கவுன்சிலர் ராஜேஸ்வரி சுப்பிரமணியன் விருத்தாசலம் ஒன்றிய துணை பெரும் தலைவர் பூங்கோதை கொளஞ்சி முன்னிலை வகித்தனர்.
விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் முகாமை துவக்கி வைத்தார். விருத்தாசலம் ஒன்றிய பெருந்தலைவர் மலர் முருகன் சிறப்புரை ஆற்றினார். முகாம் திட்ட விளக்கவுரையை மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் வழங்கினார்.
முகாமில் புற்றுநோய் சக்கர நோய் ,ரத்த அழுத்தம், இருதய கோளாறு மற்றும் முதியோர்களுக்கு உள்ள குறைபாடுகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் இலவச பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அரசு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை கல்லூரி சிறப்பு மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள்,எலும்பு சிகிச்சை மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் வார்டு உறுப்பினர்கள் மேனகா, சுசீலா, அம்சாயாள், மாலா, இந்திரா, ராஜரத்தினம், ஜெயசித்ரா, திருநாவுக்கரசு மற்றும் பணியாளர்கள் ஊராட்சி செயலர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மங்கலம்பேட்டை வட்டார சுகாதார மேட்பாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment