கடலூரில் அமைச்சர்களின் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் மாவட்ட அளவிலான கைத்தறி விற்பனை கண்காட்சி துவக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ் டாலின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைக்கப்பட்டதன் தொடராக, கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்பிரமணியம், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டு 539 சுய உதவிக் குழுக்கள் மற்றும் 84 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை சேர்ந்த 7284 உறுப்பினர்களுக்கு ரூபாய் 82.45 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் / நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
தொடந்து கடலூர், மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம் மற்றும் மாநில அரசின் கைத்தறி துறை இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கைத்தறி விற்பனை கண்காட்சியினை துவக்கி வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.
இக்கண்காட்சியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்பட்ட பாரம்பரிய பருத்தி மற்றும் பட்டு இரகங்கள் விற்பனைக்காக
காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மேலும் இக்கண்காட்சியானது 29.12.2022 முதல் 04.01.2023 வரை 7 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
இதில் அனைத்து கைத்தறி துணி ரகங்களுக்கும் 30% அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிரகங்களை வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அமைச்சர்கள் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி (IFAD) உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்கத் தொடங்கியது. மகளிரின் முன்னேற்றத்திற்காக, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் துவங்கப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு,
தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்களும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்டஇயக்குநர் பவன்குமார்
ஜி.கிரியப்பனவர், கடலூர் மாநகர துணை மேயர் பா.தாமரைசெல்வன அவர்கள், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.செந்தில் வடிவு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment