தொகுப்பு வீடு இடிந்த சம்பவம் அறிந்து வந்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 December 2022

தொகுப்பு வீடு இடிந்த சம்பவம் அறிந்து வந்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் !!!

தொகுப்பு வீடு இடிந்த சம்பவம் அறிந்து வந்து ஆறுதல் கூறி  நிவாரணம் வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் !!!


கடலூர் மாவட்டம், புவனகிரி  வட்டம்  பு.கொளக்குடிகிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான கண்ணாமணி கணவர்/ பெயர் சின்னத்தம்பி என்பவர் அதே கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்ட தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார் இந்த நிலையில் இன்று அதிகாலையில் திடீரென தொகுப்புகள் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்ததில் வீட்டின் உள்ளே இருந்த சுமார் 30.000 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. 

இத்தகவலை அறிந்த புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும்  கடலூர்  மேற்கு மாவட்ட கழக செயலாளருமான  ஆ.அருண்மொழிதேவன் B.Sc.,B.L.,MLA., அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார் மேலும் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைதொலைபேசி மூலம்  தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளையும்  தமிழக அரசு மூலம் வழங்கி வரும் தொகுப்பு வீட்டையும் உடனடியாக வழங்கிட வலியுறுத்தினார்.       
மேலும் தனது தொகுதியில் பல்வேறு கிராமங்களில்இது போன்ற பழமையான தொகுப்பு வீடுகளை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து விபத்து ஏற்படும் முன் முன்னுரிமை கொடுத்து அரசு மூலம் வழங்கி வரும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ்  புதிய தொகுப்பு வீடுகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டி  அரசு அதிகாரிகளுக்கு      கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்நிகழ்வில் புவனகிரி மேற்கு ஒன்றிய கழகசெயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான சி. என். சிவப்பிரகாசம் புவனகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சீனிவாசன் . கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் . புவனகிரி மேற்கு ஒன்றிய கழகத் துணைச் செயலாளரும் கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவருமான  E.G.பிரித்திவி. மாவட்ட  மாணவரணி செயலாளர் வீர மூர்த்தி . தலைக்குளம் கூட்டுறவு சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செங்குட்டுவன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள்  உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்

No comments:

Post a Comment

*/