ஸ்ரீமுஷ்ணத்தில் ஸ்ரீ ஐயப்பன் சாமிக்கு பதினெட்டாம் ஆண்டு குரு மரியாதை பெருவிழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 December 2022

ஸ்ரீமுஷ்ணத்தில் ஸ்ரீ ஐயப்பன் சாமிக்கு பதினெட்டாம் ஆண்டு குரு மரியாதை பெருவிழா

ஸ்ரீமுஷ்ணத்தில் ஸ்ரீ ஐயப்பன் சாமிக்கு பதினெட்டாம் ஆண்டு குரு மரியாதை பெருவிழா.


கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் வருடாந்தோறும் ஸ்ரீ ஐயப்பனுக்கு தமிழ்நாடு மற்றும் கிராமத்திலிருந்து மாலை போட்டு 48 நாள் விரதம் இருந்து செல்வது வழக்கம் அதேபோன்று ஸ்ரீமுஷ்ணத்தில் ஆண்டுதோறும் பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம் இந்த ஆண்டு பதினெட்டாம் குரு மரியாதை பெருவிழா நடைபெற்றது.


இதில் காலை ஏழு மணி அளவில் ஸ்ரீமுஷ்ணம் குளத்தங்கரை நந்தீஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஐயப்பன் உருவ சிலையை மேளதாளம் முழங்க மற்றும் கருப்பணசாமி குள்ள கருப்புசாமி விநாயகர் முருகன் வேடமிட்டு மிகவும் தத்துவமாக நடனம் ஆடிக் கொண்டே நான்கு வீதிகளிலும் வலம் வந்தனர் பின்னர் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கணபதி ஹோமம் தவ யோகி ஸ்ரீ ல ஸ்ரீ சங்கர சுவாமிகள் ஆசிர்வாதத்துடன் ஐயப்ப பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினர்.


இதில் சுந்தர மகாலிங்கம் சுவாமிகள் தவசி நாக சாமிகள் பள்ளி தாளாளர் செங்கோல் ஆத்ம குழு தலைவர் தங்க ஆனந்தன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கேசவன் சாமிநாதன் மற்றும் காசிநாதன் கணேசன் சத்யநாதன் பொறுப்பாளர்கள் உட்பட சுமார் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

*/