குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட சித்தாலி குப்பம், விருப்பாச்சி, எல்லப்பம்பேட்டை, தொண்டமாநத்தம் ஆகிய பகுதிகளில் நான்கு தலைமுறைகளாக வசித்து வரும் பொதுமக்களுக்கு இலவச பட்டா வழங்ககோரி அகில இந்திய விவசாய தொழிற்சங்கம் சார்பில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சுரேஷ்குமார் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மேலும் எல்லப்பன்பேட்டை தோப்பு தெரு பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு தற்காலிக பட்டாவை நிரந்தர பட்டாவாக மாற்றி வழங்க வேண்டும் எனவும் பெத்தநாயக்கன் குப்பம் ஊராட்சியில் கஞ்சநாதன்பேட்டை பகுதியில் நீர்நிலை அருகாமையில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்க கோரியும் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் இன்றைய தலைவர் மகேஷ் அவர்கள் தலைமை வகித்தார். உறுப்பினர்களான திவ்யா மட்டும் ரஞ்சிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகள் குறித்த விளக்க உரையை மாவட்ட செயலாளர் பிரகாஷ், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ,ஒன்றிய துணைத் தலைவர் வாசு மற்றும் ஒன்றிய துணை செயலாளர் சண்முகம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

No comments:
Post a Comment