பட்டா மாறுதலுக்கு ரூபாய்.14000 இலஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 December 2022

பட்டா மாறுதலுக்கு ரூபாய்.14000 இலஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ரூபநாராயண நல்லூரை சேர்ந்த ராமதாஸ் என்பவர் கடந்த27ஆம்தேதி கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். 



அந்த புகார்ரில் தனக்கும் தனது ஊரைச்சேர்ந்த ஆறு நபர்களுக்கும் பட்டா மாற்றம் செய்துதரக்கோரி விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அது தொடர்பாக பள்ளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியன் இராமதாஸிடம் ஒரு பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.2ஆயிரம் வீதம் ஏழு பட்டா மாற்றத்திற்கு ரூ.14,000/-லஞ்சமாக கேட்டுள்ளார். 


ராமதாஸ் மற்றும் அவரது ஊரைச்சேர்ந்தவர்கள் லஞ்சம் கொடுத்து பட்டா மாற்றம் செய்ய விருப்பம் இல்லாததால், கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் பள்ளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி புகார் கொடுத்தார்.


அவரது புகார்மனு மீது வழக்கு பதிவு செய்து 28.12.2022 ஆம் தேதி பொறிவைத்து  நடவடிக்கை மேற்கொண்டனர், கிராம நிர்வாக அலுவலர் சுப்பரமணியன் புகார்தாரரை மாலை 7.00 மணிக்கு விருத்தாசலம் பேருந்து நிலையம் வருமாறும், ஒரு மணி நேரம் கழித்து விருத்தாசலம் பேருந்துநிலையம் வரவேண்டாம், மங்களம்பேட்டைக்கு வந்து காத்திருக்குமாறும், தான் வந்து பணத்தை வாங்கிக்கொள்கிறேன் என்று புகார்தாரரை அலைக்கழித்துள்ளார். 


பின்னர் நாளை (29.12.2022) இன்று காலை 11.00 மணிக்கு பள்ளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலகம் வந்து பணத்தை கொடுக்குமாறும் கூறியுள்ளார். அதன்படி இன்று   ராமதாசிடமிருந்து ரூ.14,000/- லஞ்சபணத்தை பள்ளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியன் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் மறைந்திருந்து கண்காணித்து அவரை கைது செய்ய முற்பட்டபோது, லஞ்ச ஒழிப்பு போலீஸாரை கண்ட சுப்ரமணியன் அலுவலகத்திலிருந்து தப்பி ஓடினார், லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் அவரை துரத்தி சென்று பிடித்து அவரை கைது செய்து லஞ்சப்பணம் ரூ.14,000/- அவரிடமிருந்து கைப்பற்றி பள்ளிப்பட்டு வி.ஏ.ஓ அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். 


மேலும் பட்டப்பகலில் தப்பித்து ஓடிய வி.ஏ.ஒ.வை மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் துரத்தி பிடித்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட பள்ளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியனை விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் அழைத்து சென்று வட்டாட்சியர் தனபதி மற்றும் தலைமை அளவையர் ஆகியோர் முன்னிலையில் விசாரணை செய்து சம்மந்தப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. 



அதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியன் என்பவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்விருத்தாசலம், காட்டுகூடலூர் ரோடு, ஏ.பி நகரில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்யப்பட்டது. பொதுமக்கள் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தால், லஞ்சம் பெறும் அரசு அலுவலர்கள் லஞ்ச ஒழிப்பு துறையினரின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க உஷாராக இருந்து பணத்தை வாங்கும்போது அவர்களை தொடர்ந்து துல்லியமாக கண்காணித்து லஞ்சம் பெறும் அரசு அலுவலரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்பது இந்த சம்பவம் உணர்த்துகிறது.

No comments:

Post a Comment

*/