பரங்கிப்பேட்டையில் மூன்று அரசு பஸ் சேவையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 December 2022

பரங்கிப்பேட்டையில் மூன்று அரசு பஸ் சேவையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்

பரங்கிப்பேட்டையில் மூன்று அரசு பஸ் சேவையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் மூன்று வழித்தடங்களில் அரசு பஸ் சேவையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார் பரங்கிப்பேட்டையில் இருந்து சென்னை மற்றும் கடலூருக்கு நேரடியாக அரசு இயக்கப்படாததால் பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று பரங்கிப்பேட்டை வழியாக புதிதாக அரசு பஸ்சை இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னிர்செல்வம் உத்தரவிட்டார். 


அதன் பேரில் சிதம்பரத்திலிருந்து பரங்கிப்பேட்டை வழியாக கடலூர் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக சிதம்பரத்திற்கும் சிதம்பரத்திலிருந்து பரங்கிப்பேட்டை வழியாக சென்னைக்கும் மூன்று வழித்தடங்களில் பஸ்களை இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டனர் விழாவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார் விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்த பெருமாள் கலையரசன் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் தேன்மொழி சங்கர் துணை சேர்மன் முகமது யூனிஸ் நகர செயலாளர் முனைவர் உசேன் மற்றும் கவுன்சிலர்கள் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/