கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தாசலம் தனியார் திருமண மண்டபத்தில், நடந்த நிகழ்ச்சியில் விருத்தாசலம், திட்டக்குடி,நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்று கட்சியில் இருந்து 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், ஆண்கள் பலர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் உறுப்பினர் அட்டை பெற்று கொண்டு, கட்சியில் இணைந்தார், முன்னதாக மேடையில் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பின் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில் நெய்வேலி நிலக்கரி சுரங்க பணிகாக, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடு நிலங்களை இழந்துவிட்டது,போராட்டம் நடத்தி வருகின்றனர்,இதற்கு பல்வேறு கட்சியினர் மக்களுக்காக பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர்,நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று கேட்டதற்கு
நாம் தமிழர் கட்சி அப்பகுதி மக்களுக்காக்க போராட்டம் நடத்தி வருகின்றது,என்.எல்.சி நிறுவனம்நிலம் கையாக படுத்தியவர்களுக்கு கண்டிப்பாக வீட்டிற்கு ஒருவருக்கே வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் அதற்குரிய இழப்பீட்டுத் தொகை தர வேண்டும் மேலும் தமிழர்களைத்தான் வேலையில் சேர்க்க வேண்டும்என்பதற்காக நாம் தமிழர் கட்சியினர் போராடி வருகின்றனர் நானும் போராட்டம் நடத்த இருக்கிறேன் எனவும்
நம்முடைய நிலத்தில் நிலக்கரி எடுத்து அதன் மூலமாக மின்சாரம் தயாரித்து இந்தியா முழுவதும் தருகிற மத்திய அரசு நிலம் கொடுத்தவர்களுக்கு எந்தவித உரிமையும் தராமல் வேலை தராமல் உரிய இழப்பீடு தொகையின் தராமல் இருப்பதே மிகவும் கண்டிக்கத்தக்கது கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தருவதில்லை அது அந்த மாநிலத்தின் உரிமை என்று சொல்கிறார்கள் அதுபோல் தமிழகத்தில் நெய்வேலியில் நம் நிலத்தில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரி அதன் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மட்டும் பொது என்று சொல்கிறார்கள்என்.எல்சி தற்போதுவேலைக்கு எடுத்த299 பேரில்ஒருவர் கூட தமிழர்கள் இல்லை என்பதை கண்டிக்கத்தக்கது.
இது தமிழர்களை இளிச்சவாயர்களாக ஆக்குவதாக உள்ளது.ராகுல் காந்தியின் இந்தியா ஒற்றுமை நடை பயணத்தில் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டார் கூட்டணி வருமா என்று கேட்டதற்கு அது அவருடைய சொந்த விருப்பம் எதிர்காலத்தில் அவர்கள் கூட்டணி அமைக்கலாம் எனவும்
ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கின்ற ரயில்வேயில் உள்ள பணிகளுக்கு அந்தந்த மாநில பகுதியை சேர்ந்தவர்களை நியமனம் செய்ய வேண்டும் ஆனால் மத்திய அரசு இந்திக்காரர்களை தமிழகத்திலே பணியில் அமர்த்தி இருக்கிறது இது மிகவும் கண்டிக்கத்தக்கதே தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே ரயில்வே வேலைகளை தர வேண்டும்.ஆதார் அட்டை போலவே,தமிழ்நாட்டில் குடிமகன் அடையாள அட்டை திட்டம் ஏற்கனவே ஆதார்அட்டையின் மூலம் பொதுமக்கள் மத்திய மாநில திட்டங்களில் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது தமிழக குடிமகன் என்பதற்க்கான அடையாள அட்டை வழங்க டெண்டர் விடப்பட்டிருப்பது கமிஷன் பெறவே என கூறினார்.

No comments:
Post a Comment