எம்ஜிஆர் நினைவு நாள் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மாலை அணிவிப்பு அன்னதானம் வழங்கல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 December 2022

எம்ஜிஆர் நினைவு நாள் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மாலை அணிவிப்பு அன்னதானம் வழங்கல்

எம்ஜிஆர் நினைவு நாள் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மாலை அணிவிப்பு அன்னதானம் வழங்கல்



கடலூர் மாவட்டம் புவனகிரியில்  தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின்  35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும்புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் தலைமை தாங்கி வெள்ளாற்று பால முகப்பில் அமைந்துள்ளதமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்  எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்து புரட்சித் தலைவரின் நினைவுகள் பகிரப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தலைமைக்கழக பேச்சாளர் முருகுமணி, இணைச் செயலாளர் செஞ்சுலட்சுமி இளங்கோவன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன், நகரச்செயலாளர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் வீரமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள், விநாயகமூர்த்தி, கருப்பன், கம்மாபுரம் ஒன்றிய கழக செயலாளர் மருதை முனுசாமி சீனிவாசன், புவனகிரி அதிமுக பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ,கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆசைதம்பி சுகந்தி, சரவணன், ஊராட்சி செயலாளர் ஜெயசீலன், மனோகர், சிவஞானம், உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/