கடலூர் மாவட்டம், கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளக்கரை ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, பணிகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
வெள்ளக்கரை ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் வாயிலாக பிரதம மந்திரியின் விவசாய நுண்ணீர் பாசனம் 2022-23 திட்டத்தின் கீழ் 75 % அரசு மானியத்துடன் வாழைத்தோட்டத்தில் நுண்ணீர்பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதாடு ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மருதாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் மருதாடு நியாய விலைக்கடையில் பொருட்கள் விற்பனை மற்றும் இருப்பு குறித்து பார்வையிட்டு, பொதுமக்களிடம் நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மருதாடு பகுதியில் வேளாண்மைத்துறை வாயிலாக BPT 5204 ரக நெல் விதைப்பண்ணை வயலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment