குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம் அருகே உள்ள பெருமாள் ஏரிக்கரையில் அடையாளம் தெரியாத முதியவர் நீரில் மூழ்கி பலியானார்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம் கிராமம் அருகே பெருமாள் ஏரிக்கரை அமைந்துள்ளது.
இங்கு முதியோர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்து கிடப்பதாக குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த முதியவர் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment