சேத்தியாத்தோப்பு அருகே பொன்னாங்கோயில் கிராமத்தில் நடந்த முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 December 2022

சேத்தியாத்தோப்பு அருகே பொன்னாங்கோயில் கிராமத்தில் நடந்த முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சேத்தியாத்தோப்பு அருகே பொன்னாங்கோயில் கிராமத்தில் நடந்த முத்துமாரியம்மன்  கோயில் கும்பாபிஷேகம்.


கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ளபொன்னங்கோவில் கிராமத்தில்  ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் புணரமைக்கும் பணிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் அப்பணிகள் முடிவுற்றபின் கிராம மக்கள் சார்பில் கோவில் கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்து அதன்படி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் வைக்கப்பட்ட பல்வேறு நதிகளிலிருந்து கொண்டுவரப்ப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு மங்கள இசை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், லஷ்மிஹோமம், நவகிரஹஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேபலி, அங்குரார்பணம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் புனிதநீர்கலசம் கடம்புறப்பாடு மூலம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு புனிதநீர்க்கலசம் கோவில் கோபுரத்தின்மேல் கொண்டு செல்லப்பட்டு கோபுரக்கலசத்தின் மேல் புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகாதீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

*/