சிதம்பரம் அருகேரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் . - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 December 2022

சிதம்பரம் அருகேரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் .

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுவில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாரக்க ரகசிய தகவல் கிடைத்தது.


அதன் பெயரில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பர் ரகுபதி அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மணிகண்டன்(வயது 30) என்பவரது  மளிகை கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.


அப்போது கடையில் பின்புறம் உள்ள அறையில்  58 முட்டைகளில்  புகையிலை பொருட்கள் இருந்தன இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும் இதை யடுத்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே தலைமறைவான மளிகை கடைக்காரர் மணிகண்டனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/